Friday, 20 March 2015

விராட் கோலியை காதலிக்கும் புதிய கவர்ச்சி நடிகை........

பாலிவுட்டில் நுழைந்து தனது கவர்ச்சியால் அனைவரையும் கவர முயன்றவர் ராக்கி சாவந்த். ஆனால் ஏற்கனவே பாலிவுட்டில் பல கவர்ச்சிப் புயல்கள் வீசுவதால் ராக்கி காணாமல் போனார்.

சினிமா கைவிட்டால் என்ன அரசியலுக்கு செல்வோம் என்று சென்றார். புது கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வியதும் ச்,சீ அரசியல் பழம் புளிக்கிறது என்று கூறிவிட்டார்.

விருது விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ராக்கி கவர்ச்சியான உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முயன்று வருகிறார்.


மும்பையில் கட்டப்பட்டுள்ள கடையை திறந்து வைக்க வந்தார் ராக்கி. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை மனதார காதலிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், விராட் கோஹ்லியும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். கோஹ்லி தனது காதலை ஒப்புக் கொண்ட போதிலும், அனுஷ்கா மட்டும் அது பற்றி பேசுவதே இல்லை.


கோஹ்லியின் காதலை அனுஷ்கா வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் நான் என் காதலை கோஹ்லியிடம் தெரிவிக்கிறேன் என்கிறார் ராக்கி.

0 comments:

Post a Comment